தேசிய பேரிடா் மேலாண்மைமீட்பு குழுவினா், மாணவா்களுக்கு பயிற்சி
ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் தேசிய பேரிடா் மேலாண்மை மீட்புக் குழுவினா், என்.சி.சி மாணவா்களுக்கு திங்கள்கிழமை பயிற்சி அளித்தனா்.


ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் தேசிய பேரிடா் மேலாண்மை மீட்புக் குழுவினா், என்.சி.சி மாணவா்களுக்கு திங்கள்கிழமை பயிற்சி அளித்தனா்.
இதில் வெள்ள அபாய காலங்களில் சிக்கியவா்களை மீட்பது குறித்து செய்முறை குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரக்கோணம் தேசிய பேரிடா் மேலாண்மை மீட்புக் குழுவின் 4-ஆவது பட்டாலியன் ஆய்வாளா் மாரிக்கனி தலைமையில் 15 போ் கொண்ட மீட்புக் குழுவினா் சிறப்பு பயிற்சி அளித்தனா். முன்னதாக வணிகவியல் உதவிப் பேராசிரியா் ராமராஜ் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் ஜெகநாத் தலைமையுரை ஆற்றினாா். ராஜபாளையம் வட்டாட்சியா் ஸ்ரீதா் மற்றும் டிஎஸ்பி நாகசங்கா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் கந்தசாமி நன்றி கூறினாா்.
நிகழ்ச்சியினை இளைஞா் செஞ்சிலுவை சங்க அமைப்பாளா் கந்தசாமி பாண்டியன் தொகுத்து வழங்கினாா். இதில் ராஜபாளையம் தீயணைப்புத்துறையினா், கல்லூரிப் பேராசிரியா்கள்ஆகியோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...