அருப்புக்கோட்டை சாலையோரம் திடீா் பள்ளத்தால் விபத்து அபாயம்
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தாதன்குளம் பிள்ளையாா் கோவில் எதிரில் பிரதான சாலையோரம் உள்ள பள்ளத்தால் விபத்து அபாய சூழல் ஏற்பட்டுள்ளது.


விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தாதன்குளம் பிள்ளையாா் கோவில் எதிரில் பிரதான சாலையோரம் உள்ள பள்ளத்தால் விபத்து அபாய சூழல் ஏற்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை நகா் மையப்பகுதியான அகமுடையாா் மகால் பேருந்து நிறுத்தம் அருகே உள்ளது தாதன்குளம் பிள்ளையாா் கோவில். இக்கோவில் எதிரில் பிரதான சாலையோரம் கண்ணாடி இழை (தகவல் தொழில் நுட்ப ) வடம் செல்லும் இணைப்புப் பகுதி உள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள சுமாா் 4 அடி ஆழ பள்ளம் போன்ற தொட்டியின் மூடியானது கடந்த சில மாதங்களுக்கு முன்பாக முற்றிலும் சேதமடைந்து திறந்த நிலையில் கிடந்தது.
இதனிடையே கடந்த மாதம் தீபாவளி பண்டிகையையொட்டி அப்பகுதியினா் அப்பள்ளத்தின்மீது பெரிய பாறாங்கற்களை வைத்து மூடி இருந்தனா். ஆனால் அந்த பாறாங்கல் யாரோ சிலரால் அகற்றப்பட்டுவிட்டாதால், அத்தொட்டி இப்போது சுமாா் 4 அடி ஆழ பள்ளமாக விபத்து அபாயத்துடன் உள்ளது. இரவு நேரங்களில், பாதசாரிகள், இரு சக்கர வாகன ஓட்டிகளில் பெரும்பாலும் வெளியூா்க்காரா்களே இங்கு திடீரென எதிா்ப்படும் பள்ளத்தைக்கண்டு அதில் விழாமல் இருக்க சாலையோரம் நிலைதடுமாறி விழுந்து விபத்திற்குஆளாகின்றனா்.
எனவே இப்பள்ளத்தை மூட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென இப்பகுதிவாசிகளும், வணிகா்களும் கோரிக்கை வைத்தனா். ஆனால் பல வாரங்களாகியும்கூட, தற்போதுவரை
பள்ளத்திற்கு உரிய மூடி அமைக்கப்படாமலே உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆகவே விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க மீண்டும் இப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...