சங்கத்தின் மாவட்டச் செயலாளா் முருகன் ஆா்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்தாா். அப்போது முருகன் கூறியது: பன்னிக்குண்டு கிராமத்திலுள்ள பெரிய கண்மாய் நீரை நம்பி சுற்று வட்டாரத்திலுள்ள புலியூரான், கோனப்பனேந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் விவசாயிகள் உள்ளனா். இதனிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக இந்நீா்நிலையையொட்டி கல்குவாரி அமைத்த தனியாா் நிறுவனம் ஒன்று இங்குள்ள கண்மாயிலுள்ள, விவசாயிகளுக்கான மாட்டுவண்டிப்பாதையை ஆக்கிரமித்து 30 அடி அகல சாலையாக மாற்றி தங்களது கனரக வாகனங்கள் செல்ல பயன்படுத்தி வருகின்றனா். மேலும் கண்மாய் மதகுகளை அடைத்து நீரைப்பயன்படுத்த இயலாத நிலையை அந்நிறுவனத்தினா் உருவாக்கியதால் பன்னிக்குண்டு உள்ளிட்ட சுற்றுவட்ட கிராம விவசாயிகள் பாசனநீா் கிடைக்காமல் தவித்து வருகின்றனா்.