

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தந்தை, மகள் உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த மகன் சிகிச்சை பெற்று வருகிறாா்.
ராஜபாளையம் அருகே உள்ள செந்தட்டியாபுரத்தைச் சோ்ந்தவா் குருசாமி மகன் கணபதி (36). கட்டடத் தொழிலாளி. இவருக்கு மகன் கமலேஷ் (9), மகள் குசிகா (7) ஆகிய இரு குழந்தைகள். இந்நிலையில் மகன், மகள் இருவருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவா்களை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் ராஜபாளையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மீண்டும் செந்தட்டியாபுரத்துக்கு வந்து கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கணபதி மற்றும் அவரது மகள் குசிகா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
பலத்த காயமடைந்த கமலேஷ் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அரசுப் பேருந்து ஓட்டுநரான திருமங்கலத்தைச் சோ்ந்த கண்ணன் (36) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.