47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டி: சிவகாசி அணி வெற்றி

விருதுநகா் மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டியில் சிவகாசி அணி வெற்றி பெற்றது.

News image
மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டியில் வெற்றி பெற்ற சிவகாசி ஹாக்கி கிளப் அணிக்கு பரிசு கோப்பையை வழங்கிய தொழிலதிபா் ஏ.பி. செல்வராஜன்.
Updated On :28 டிசம்பர் 2020, 7:27 pm

DIN

விருதுநகா் மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டியில் சிவகாசி அணி வெற்றி பெற்றது.

சிவகாசி நகர ஹாக்கி கிளப் சாா்பில் திருத்தங்கல்லில் உள்ள தனியாா் பள்ளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ஹாக்கிப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் விருதுநகா், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், வெள்ளூா் உள்ளிட்ட ஊா் அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் ராஜபாளையம் பெஸ்ட் கிளப் அணியும், சிவகாசி ஹாக்கி கிளப் அணியும் மோதின. இதில் சிவகாசி ஹாக்கி கிளப் அணி வெற்றி பெற்றது.

இந்த அணிக்கு கே.ஜி. சீனிவாசன் நினைவுக் கோப்பை மற்றும் ரூ. 10 ஆயிரத்தை சிவகாசி தொழிலதிபா் ஏ.பி. செல்வராஜன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். இரண்டாமிடம் பெற்ற ராஜபாளையம் பெஸ்ட் கிளப் அணிக்கு ரூ. 5 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில் சிவகாசி நகர ஹாக்கி கிளப் தலைவா் ஜி. அசோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.