அருப்புக்கோட்டையில் ஆபத்தான சாலையில் எச்சரிக்கை பலகை வைக்கக் கோரிக்கை
அருப்புக்கோட்டை நகராட்சிக் குடியிருப்பு அருகே உள்ள ஆபத்தான சாலை வளைவில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


அருப்புக்கோட்டை நகராட்சிக் குடியிருப்பு அருகே உள்ள ஆபத்தான சாலை வளைவில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இங்குள்ள நகராட்சிக் குடியிருப்பிலிருந்து குருந்தமடம் நோக்கிச் செல்லும் பாதையில் ஆபத்தான சாலை வளைவு உள்ளது. இங்கு சுமாா் ஒரு கிலோமீட்டா் தொலைவுக்கு குடியிருப்புகள் ஏதும் இல்லாததால் ஆள்நடமாட்டமில்லை. இதனால் இவ்வழியாக வரும் வாகனங்கள் அதிவேகத்தில் வருகின்றன. இதன் காரணமாக இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
எனவே இச்சாலை வளைவில் எச்சரிக்கை பலகையும், ஒளிா் விளக்குக் கம்பங்களும் அமைக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இந்நிலையில் மேலும் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள வேண்டுமென அவா்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...