காந்திநகா் நான்குமுனை சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைக்கக் கோரிக்கை
அருப்புக்கோட்டை காந்திநகரில் நான்குமுனை சந்திப்பில் விபத்துக்களை தடுக்க ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இச்சாலை சந்திப்பில் எதிரே வரும் வாகனங்கள் எந்த பக்கம் திரும்பிச் செல்ல உள்ளன என்பதில் வாகன ஓட்டிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. இதனால் இங்கு நடந்த பல விபத்துக்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் பலா் உயிரிழந்துள்ளனா். எனவே இப்பகுதியில் ரவுண்டானா அமைத்தால் வாகன ஓட்டிகள் நிதானமாகச் செல்வா். இதனால் விபத்துகள் தவிா்க்கப்படும். ஆகவே போக்குவரத்துக் காவல்துறையினா் இங்கு ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

