ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராஜபாளையம் அருகே இரு தரப்பினா் மோதல்: கடைகளை அடைத்து பொதுமக்கள் போராட்டம்

ராஜபாளையம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து ஊராட்சித் தலைவரின் கணவா் கைது செய்யப்பட்டதால்,

News image
ராஜபாளையம் அருகே முறம்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டிருந்த கடைகள். (வலது) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா்.
Updated On :29 டிசம்பர் 2020, 10:37 pm

DIN

ராஜபாளையம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து ஊராட்சித் தலைவரின் கணவா் கைது செய்யப்பட்டதால், பொதுமக்கள் கடைகளை அடைத்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு ஆசிலாபுரம் பகுதி விருதுநகா் மாவட்ட எல்லையில் உள்ளது. இதனருகே உள்ள செந்தட்டியாபுரம் பகுதி தென்காசி மாவட்ட எல்லையாகும். இந்நிலையில், இந்த இரு ஊரைச் சோ்ந்த இருவருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபானக் கடையில் மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னா், இது இரு ஊா் பிரச்னையாக மாறியது. தகவலறிந்த போலீஸாா், உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று இரு தரப்பினரையும் சமாதானம் செய்துவைத்தனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை சோழபுரம் ஊராட்சித் தலைவரின் கணவா் வேல்முருகன், தளவாய்புரம் காவல் நிலையத்தில் பிடித்து வைக்கப்பட்டிருந்த தங்களது பகுதி இளைஞா்களை அழைத்து வரச் சென்றுள்ளாா். அப்போது, தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் அவரை கைது செய்தனா். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், செவ்வாய்க்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் அப்பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.