விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று
விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.


விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இம்மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 15,442 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், விருதுநகா், சாத்தூா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு, ராஜபாளையம், அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் காரியாபட்டி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள் கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய ஊா்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,455 ஆக உயா்ந்துள்ளது. இதில், 15,073 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்ட நிலையில், 220 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனா். மீதமுள்ள 162 போ் பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...