47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

புலியூரானில் சேதமடைந்த நியாய விலைக்கடையால் விபத்து ஏற்படும் அபாயம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் புலியூரான் கிராமத்தில் கான்கிரீட் மேற்கூரை சேதமடைந்த நிலையிலுள்ள நியாயவிலைக்கடைக் கட்டடத்தை விரைவில் சீரமைக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.

News image
சேதமடைந்துள்ள நியாயவிலைக்கடை
Updated On :3 நவம்பர் 2020, 10:43 am

DIN

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் புலியூரான் கிராமத்தில் கான்கிரீட் மேற்கூரை சேதமடைந்த நிலையிலுள்ள நியாயவிலைக்கடைக் கட்டடத்தை விரைவில் சீரமைக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.

புலியூரான் கிராமத்தில் சுமார் 10  ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட கட்டடத்தில் நியாயவிலைக்கடை செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் காலப்போக்கில் உரிய பராமரிப்பு இல்லாததால் அக்கட்டடத்தின் கான்கிரீட் மேற்கூரையும்,அதன் முன்புறமுள்ள பால்கனியும் சேதமடைந்து கான்கிரீட் உதிர்ந்து உள்ளிருக்கும் கட்டுமானக் கம்பிகள் வெளித்தெரிகின்றன.

மேலும் தொடர்மழை பெய்யும்போதெல்லாம் கான்கிரீட்டானது சிறிது  சிறிதாகப் பெயர்ந்து கீழே விழுவதால்,அங்கு வரிசையில் நின்று பொருட்கள் வாங்க பொதுமக்கள் அச்சப்டும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால் இக்கட்டடத்தைச் சீரமைக்க கிராமத்தினர் பலமுறை கோரிக்கை வைத்தும் தற்போதுவரை நடவடிக்கை இல்லையெனப் புகார் எழுந்துள்ளது.

எனவே விபத்துக்கள் நேரும் முன்பாக விரைவில் இக்கட்டடத்தைச் சீரமைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு கிராமத்தினர் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.