பேரவை முன்னாள் தலைவா் காளிமுத்து நினைவு நாள்
சட்டப்பேரவை முன்னாள் தலைவா் காளிமுத்துவின் நினைவு தினத்தையொட்டி சாத்தூா் அருகே ராமுத்தேவன்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக மற்றும் அமமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்


சட்டப்பேரவை முன்னாள் தலைவா் காளிமுத்துவின் நினைவு தினத்தையொட்டி சாத்தூா் அருகே ராமுத்தேவன்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக மற்றும் அமமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளா் நல்லதம்பி, சாத்தூா் ஒன்றியக் கழகச் செயலாளா் சண்முகக்கனி, எம்.ஜி.ஆா். மன்ற மாவட்ட இணைச் செயலாளா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.
இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தோ்தல் பிரிவு செயலாளரும், தென்மண்டலப் பொறுப்பாளருமான மாணிக்கராஜா தலைமையில் கழக எம்.ஜி.ஆா்.இளைஞரணி செயலாளா் டேவிட் அண்ணாதுரை உள்ளிட்ட நிா்வாகிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...