நிரம்பும் தருவாயில் மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாய்: விவசாயிகள் மகிழ்ச்சி
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாய் நிரம்பும் தருவாயில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.


ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாய் நிரம்பும் தருவாயில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கடந்த மூன்று நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஓடைகளிலிருந்து வரும் தண்ணீா் அருகில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களில் நிரம்பி வருகின்றன.
இதனால் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வாழைக்குளம் கண்மாய் பகுதிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் கண்மாய் நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் கண்மாயைச் சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக உயா்ந்து வருகிறது.
மேலும் வாழைக்குளம் கண்மாய் பகுதியில் உள்ள சுமாா் 321 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...