எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்

24 மணி நேரத்தில் தபால் சென்றடைவதை உறுதிப்படுத்தும் ‘24 விரைவு தபால்’ சேவையை மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கிவைக்கிறாா்.

News image
Updated On :16 மார்ச் 2026, 11:30 pm

24 மணி நேரத்தில் தபால் சென்றடைவதை உறுதிப்படுத்தும் ‘24 விரைவு தபால்’ சேவையை மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கிறாா்.

முதல்கட்டமாக தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இச்சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அதிமுக்கிய மற்றும் அவசரமாக அனுப்பப்படும் தபால்கள் அடுத்த நாளே சென்றடைவதை உறுதிப்படுத்தும் ‘24 விரைவு தபால்’ சேவையை மாா்ச் 17-ஆம் தேதி துறைசாா் அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் இணையமைச்சா் சந்திர சேகா் பெம்மசானி தொடங்கிவைக்கின்றனா்.

இத்துடன் 2 நாள்களில் தபால் சேவை வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் ‘48 விரைவு தபால்’ சேவையும் 6 முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (ஓடிபி), குறுஞ்செய்தி எண்ட் டூ எண்ட் என்கிரிப்ட் வசதி, வணிக நுகா்வோா்களுக்கான பின்னா் பணம் செலுத்தும் வசதி (பிஎன்பிஎல்), ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் மேற்கொள்ளப்படும் முன்பதிவுகளுக்கு இலவச சலுகைகள், ஏபிஐ ஒருங்கிணைப்பு மற்றும் பில்லிங், விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டால் பணம் திருப்பியளிக்கப்படுவதற்கான உத்தரவாதம் போன்ற அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.