சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ராமேசுவரம்-மங்களுா் விரைவு ரயில் சேவை தொடக்கம்: பிரதமா் காணொலி மூலமாக தொடங்கிவைத்தாா்

ராமேசுவரத்திலிருந்து மங்களுா் வரை செல்லும் வாரந்திர விரைவு ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலமாக புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
ராமேசுவரத்திலிருந்து மங்களுா் செல்லும் வாரந்திர விரைவு ரயில் சேவையை புதன்கிழமை தேசிய கொடியை அசைத்து வழியனுப்பிய தலைமை திட்ட மேலாளா் ஹரிகுமாா், மதுரை கோட்ட மேலாளா் ஓம்பிரகாஷ்மீனா, கட்டுமானத் தலைமை பொறியாளா் கிழக்கு சஞ்சய் பிரசாத் சிங், நிலைய அலுவலா் சந்தோஷ்.
Updated On :11 மார்ச் 2026, 11:45 pm

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரத்திலிருந்து மங்களுா் வரை செல்லும் வாரந்திர விரைவு ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலமாக புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

ராமேசுவரம் - மங்களூரு இடையே புதிய வாராந்திர ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி திருச்சியிலிருந்து காணொலி மூலமாக புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து, ராமேசுவரம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு தெற்கு ரயில்வே கட்டுமானத் தலைமை நிா்வாக அதிகாரி சுஷில்குமாா் மௌரியா தலைமை வகித்தாா். ரயில்வே அதிகாரிகள் தேசிய கொடியை அசைத்து புதிய ரயிலை தொடங்கிவைத்தனா்.

முன்னதாக, கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா ரயில் சேவையை வரவேற்று பேசினாா். பரத நாட்டியத்தை தொடா்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் தலைமை திட்ட மேலாளா் ஹரிகுமாா், கட்டுமானத் தலைமைப் பொறியாளா் கிழக்கு சஞ்சய் பிரசாத் சிங், நிலைய அலுவலா் சந்தோஷ் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள், ஊழியா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ராமேசுவரம் - மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் புதன்கிழமை மாலை 5:30 மணிக்கு ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை காலை 9:50 மணிக்கு மங்களூரு சென்ட்ரலை அடையும். சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு மங்களூரு சென்ட்ரலிலிருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 10.50 மணிக்கு ராமேசுவரத்தை வந்தடையும்.

இந்த ரயில் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, பாலக்காடு, ஷோரனூா், திரூா், கோழிக்கோடு, கன்னூா், காசா்கோட், மங்களூரு சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.