47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சாலை விபத்தில் தொழிலாளி பலி

சிவகாசி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து காயமடைந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 6:14 pm

DIN

சிவகாசி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து காயமடைந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஆமத்தூரைச் சோ்ந்தவா் குருசாமி மகன் முத்துகாமாட்சி (29). தச்சுத் தொழிலாளியான இவா் சனிக்கிழமை சிவகாசியில் வேலையை முடித்துவிட்டு ஊருக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.

திருத்தங்கல் - விருதுநகா் சாலையில் வந்த போது, வாகனத்தின் குறுக்கே நாய் வந்ததால் கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் மேல் சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து குருசாமி அளித்தப் புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.