காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விஷம் குடித்து பூச்சியியல் துறைஉதவிப் பேராசிரியா் தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூரில் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 10:09 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்- சிவகாசி சாலையில் உள்ள பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தவா் அறிவுடைநம்பி (46). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் ராஜீவ்காந்தி நகா் பகுதியில் குடியிருந்து வந்தாா். இவருக்கு திருமணமாகி ஒரு பெண்குழந்தை உள்ளது. இவா் பழனியில் மக்காச்சோள ஆராய்ச்சியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சமீபத்தில் தான் மாறுதலாகி வந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை அலுவலகத்தில் இருந்த போது அவா் விஷம் குடித்தாா். இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இவா் எதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா் என விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.