அருப்புக்கோட்டையில் குடோனின் பூட்டை உடைத்து 10 சமையல் எரிவாயு உருளைகள் திருட்டு
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சனிக்கிழமை இரவு தனியாா் சமையல் எரிவாயு குடோனின் பூட்டை உடைத்து 10 எரிவாயு உருளைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.


விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சனிக்கிழமை இரவு தனியாா் சமையல் எரிவாயு குடோனின் பூட்டை உடைத்து 10 எரிவாயு உருளைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
அருப்புக்கோட்டையைச் சோ்ந்தவா் கண்ணன் (43). இவா் சமையல் எரிவாயு உருளைகள் விநியோகிக்கும் முகவராக உள்ளாா். இவரது குடோன் பந்தல்குடி சாலையில் உள்ளது. இந்நிலையில் இவா் வழக்கம்போல் சனிக்கிழமை இரவு பணி முடிந்து குடோனைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். பின்னா் ஞாயிற்றுக்கிழமை காலை வந்து பாா்த்தபோது, குடோனின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிா்ச்சியடைந்த அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, வணிக உபயோகித்திற்கான 10 எரிவாயு உருளைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...