47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அருப்புக்கோட்டையில் நியாயவிலைக் கடைக் கட்டடத்தை சீரமைக்கக் கோரிக்கை

அருப்புக்கோட்டை அருகே சின்னபுளியம்பட்டியில் இடிந்து விழும் நிலையில் உள்ள நியாயவிலைக் கட்டடத்தை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
சின்னபுளியம்பட்டியில் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள நியாயவிலைக் கடைக் கட்டடம்.
Updated On :11 அக்டோபர் 2020, 5:51 pm

DIN

அருப்புக்கோட்டை அருகே சின்னபுளியம்பட்டியில் இடிந்து விழும் நிலையில் உள்ள நியாயவிலைக் கட்டடத்தை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அருப்புக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட சின்னபுளியம்பட்டியில் உள்ள நியாயவிலைக் கடையின் முன்புற மாடம் கடந்த சில நாள்களுக்கு முன்பு இடிந்தது. இடிந்த அப்பகுதி

சிமெண்ட் அட்டையால் வேயப்பட்டிருக்கும் கூரையின் மேல் நின்று கொண்டிருக்கிறது. இதனால் அக்கடையில் பொருள்கள் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது மழை காலம் என்பதால் அந்த நியாயவிலைக் கடை கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே அதனை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.