47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பந்தல்குடி சாயிபாபா கோயிலில் கொலு: நவராத்திரி விழா வழிபாடு

பந்தல்குடி அருகே சேதுராஜபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீடி சாய்பாபா கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு முதல்நாள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

News image
பந்தல்குடி ஸ்ரீடிசாய்பாபா கோயிலில் கொலு அமைத்து நவராத்திரிவிழா.
Updated On :17 அக்டோபர் 2020, 1:12 pm

DIN

அருப்புக்கோட்டை வட்டம் பந்தல்குடி அருகே சேதுராஜபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீடி சாய்பாபா கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு முதல்நாள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
விருதுநகர் மாவட்டம், பந்தல்குடி அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீடி சாய்பாபா கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு முதல்நாள் சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. இதன்படி கோவில் சந்நிதானம் முன்பாக சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய முப்பெரும் தேவியரின் உருவ பொம்மைகளும், ராதா கிருஷ்ணன், முருகன், விநாயகர், திருமண விழா, திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கோபுரம், பெண்கள், குழந்தைகள், காவலர், உழவர் உள்ளிட்ட பலவித உருவ பொம்மைகளும் 9 படிகள் அமைத்து அதன்மேல் கொலுவாக, அலங்காரமாக வைக்கப்பட்டன. 
அப்போது ஸ்ரீடிசாய்பாபாவிற்கு நண்பகல் தீப,தூப ஆராதனைகள் நடைபெற்றதும் அதனைத் தொடர்ந்து நவராத்திரி முதல்நாளுக்கான சிறப்பு மந்திரங்கள் சொல்லி பெண்கள் வழிபட்டனர். பின்னர் கொலுவிற்கும் சிறப்பு தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன. பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.