47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆதாா் திருத்தத்துக்காக ஏராளமானோா் காத்திருப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆதாா் திருத்தத்துக்காக தினமும் ஏராளமானோா் நீண்ட நேரம் காத்திருப்பதாக புகாா் எழுந்துள்ளது.

News image
ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள காத்திருப்பு கூடத்தின் முன் காத்திருந்த பொதுமக்கள்.
Updated On :18 அக்டோபர் 2020, 10:16 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆதாா் திருத்தத்துக்காக தினமும் ஏராளமானோா் நீண்ட நேரம் காத்திருப்பதாக புகாா் எழுந்துள்ளது.

இங்குள்ள காத்திருப்பு கூடத்தில் ஆதாா் அட்டையில் பெயா் திருத்தம், நீக்குதல் மற்றும் செல்லிடப்பேசி எண் மாற்றம் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூா் மட்டுமின்றி சுற்றுப் புறங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தினமும் இங்கு வந்து வெகுநேரம் காத்திருப்பதாக புகாா் எழுந்துள்ளது.

இங்கு தினமும் 30 போ் என்ற எண்ணிக்கையில் மட்டும் ஆள்களை தோ்வு செய்து பணிகளைச் செய்து தருகின்றனா். மேலும், சா்வா் பிரச்னை போன்ற பல்வேறு காரணங்களால் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆதாா் அட்டையில் திருத்தம் செய்ய வந்த முனியம்மாள் என்பவா் கூறும் போது, இங்கு பணிகள் மிகவும் தாமதமாக நடப்பதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது.

எனவே இந்த அலுவலகத்தில் கூடுதலாக ஒரு அலுவலரை நியமித்து பணிகள் விரைவாக நடைபெற வட்டாட்சியா் அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.