47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேவர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ள தேவர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

News image
தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக எம்எல்ஏ சந்திரபிரபா.
Updated On :30 அக்டோபர் 2020, 9:15 am

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ள தேவர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முத்துராமலிங்கத் தேவரின் 113-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் 58ஆவது குருபூஜை வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில், வடக்கு ஒன்றிய செயலாளர் முத்தையா, வத்திராயிருப்பு ஒன்றிய குழு பெருந்தலைவர் சிந்துமுருகன், மாவட்ட கவுன்சிலர் கணேசன், மாவட்ட மகளீரணி இணைச் செயலாளர் மீராதனலட்சுமி முருகன்,முன்னாள் நகரச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், கூட்டுறவு வங்கித் துணைத் தலைவர் மணி நகரப் பொருளாளர் கருமாரிமுருகன், மற்றும் காமராஜ், அங்குராஜ், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.