47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அருப்புக்கோட்டையில் பணம் பட்டுவாடா: அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

அருப்புக்கோட்டையில் ஓட்டுக்குப் பணம் பட்டுவாடா செய்த அதிமுக பிரமுகரிடமிருந்து ரூ47,000 பணம் பறிமுதல் செய்ததுடன் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து

News image
அருப்புக்கோட்டையில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி மகேஷ்வரி பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை சரிபார்த்து ஆய்வுசெய்தபோது.
Updated On :4 ஏப்ரல் 2021, 1:04 pm

DIN

அருப்புக்கோட்டையில் ஓட்டுக்குப் பணம் பட்டுவாடா செய்த அதிமுக பிரமுகரிடமிருந்து ரூ47,000 பணம் பறிமுதல் செய்ததுடன் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் சொக்கலிங்கம்(68). இவர், அருப்புக்கோட்டை நகர் அதிமுக 8 வது வார்டு கிளைச் செயலாளர் ஆவார். 

இவர் வீடு வீடாகச் சென்று ஓட்டுக்குப் பணம் அளிப்பதாகக் காவல்துறைக்கு ரகசியத் தகவல் வந்ததாம். அத்தகவல் அடிப்படையில் காவல்துறையினர் உதவியுடன் மண்டல துணை வட்டாட்சியரும், தேர்தல் பறக்கும்படை அலுவலருமான மகேஸ்வரி சம்பவம் தொடர்பாக சொக்கலிங்கத்தை அவரது வீட்டில் சென்று ஆய்வு செய்தனர். 

அப்போது அவரிடம் ஓட்டுக்குப்பணம் பட்டுவாடா செய்ததற்கு அடையாளமாக ஒரு பையில் அப்பகுதி வாக்காளர்களின் குறிப்புகளுடன் கூடிய பெயர்ப்பட்டியலும், மேலும் மற்றொரு பையில் ரூ47,000 பணமும் கண்டறியப்பட்டதாம். எனவே அப்பணத்ததைப் பறிமுதல் செய்த அதிகாரி மகேஸ்வரி, அதை தேர்தல் நடத்தும் அலுவலரான முருகேசன் முன்னிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில்  ஒப்படைத்தார். 

இதன்படி தேர்தல் நடத்தும் அலுவலர் பணத்தைச் சரிபார்த்த பின் உரிய ஆவணங்களுடன் அதிகாரி மகேஸ்வரி நகர் காவல்துறையிடம் புகார் அளித்தார். இதன்படி ஓட்டுக்குப்பணம் பட்டுவாடா செய்ததாக சொக்கலிங்கத்தின் மீது வழக்குபதிந்த காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.