47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாறைக்குளம் வெள்லியம்பலநாதர் கோயிலில் பங்குனி மாத பிரதோச வழிபாடு 

திருச்சுழி அருகே பாறைக்குளம் அருள்மிகு வெள்லியம்பலநாதர் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை பங்குனி மாத பிரதோச வழிபாடு நடைபெற்றது.

News image
வெள்ளிக்கிழமை பிரதோச வழிபாட்டையடுத்து முழு அலங்காரத்தில் பக்தர்களுக்காட்சி தந்த பாறைக்குளம் அருள்மிகு வெள்ளியம்பலநாதர்.
Updated On :9 ஏப்ரல் 2021, 2:40 pm

DIN

திருச்சுழி அருகே பாறைக்குளம் அருள்மிகு வெள்லியம்பலநாதர் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை பங்குனி மாத பிரதோச வழிபாடு நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், பாறைக்குளம் அருள்மிகு  வெள்ளியம்பலநாதர் கோயிலில் பங்குனி மாத பிரதோச நாளையொட்டி வெள்ளிக்கிழமை மாலை அருள்மிகு நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைப்பொருட்களால் அபிஷேகமும், தீப, தூப ஆராதனைகளும் சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றன. 

அதையடுத்து கருவறையிலுள்ள லிங்கத் திருமேனியாகிய வெள்ளியம்பலநாதருக்கு பால், பன்னீர், வில்வ இலை, வாழை, பேரீச்சம்பழங்கள், தேன் கலந்க கலவையாலும், குங்குமம் கலந்த நீர், விபூதி கலந்த நீர், தயிர், இளநீர், கஸ்தூரி மஞ்சள் தூள் கலந்த நீர், கிழங்கு மஞ்சள்தூள் கலந்த நீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப்பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீப, தூப ஆராதனைகளும் நடைபெற்றன. 

பின்னர் நடை சாற்றப்பட்டு லிங்கத்திருமேனிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்தபின், வெள்ளியம்பலநாதர் பக்தர்களுக்குக் காட்சியளித்து அருள்பாலித்தார். முன்னதாக நந்தீஸ்வரர் மற்றும் வெள்ளியம்பலநாதருக்கு அபிஷேகப் பொருட்கள், மலர்கள்,மாலைகள் ஆகியன படைத்து மகாமிருத்யஞ்சய மந்திரம், நமச்சிவாய மந்திரங்கள் சொல்லி பக்தர்கள் வழிபட்டனர். 

தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் குங்குமம், விபூதி, பஞ்சாமிர்த பிரசாதங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் சிவனடியாரும், கோயில் பூசாரியுமான ராஜபாண்டி செய்திருந்தார்.நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் நேரில் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.