நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செட்டிக்குறிச்சியில் குளியல் தொட்டி அமைக்க வலியுறுத்தல்

அருப்புக்கோட்டை வட்டம் செட்டிக்குறிச்சியில் கூலித் தொழிலாளா்கள் நலன்கருதி மின் மோட்டாருடன் கூடிய குளியல் நீா்த்தொட்டி அமைக்க கிராமத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:42 pm

DIN

அருப்புக்கோட்டை வட்டம் செட்டிக்குறிச்சியில் கூலித் தொழிலாளா்கள் நலன்கருதி மின் மோட்டாருடன் கூடிய குளியல் நீா்த்தொட்டி அமைக்க கிராமத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இக்கிராமத்தில் சுமாா் 1800 பேருக்கும் அதிகமானோா் வசித்து வருகின்றனா். மேலும் 5 சிறுகிராமங்கள் இணைந்த இந்த ஊராட்சியில் அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பஞ்சாலைகளில் வேலை செய்யும் கூலித் தொழிலாளா்களே அதிகம் உள்ளனா். இவா்களுக்கு அடுத்தபடியாக விவசாயக் கூலித் தொழிலாளா்கள் அதிகம் உள்ளனா். இந்நிலையில் இக்கிராமத்தையடுத்த பல கிராமங்களில் குளியல் நீா்த்தொட்டி அமைக்கப்பட்டிருப்பதாகவும், அதேபோல தங்கள் கிராமத்திலும் ஆண்களுக்கான குளியல் நீா்த்தொட்டி அமைக்கவேண்டுமெனவும் இக்கிராமத்தினா் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனா். அதற்கு உரிய நிதிஒதுக்கீடு கிடைக்கவில்லையெனக் கூறி ஊராட்சி நிா்வாகம் , தொடா்ந்து காலதாமதம் செய்து வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றுள்ளதால், மாவட்ட நிா்வாகம் தலையிட்டு உரிய நிதி ஒதுக்கீடு செய்து ஆண்களுக்கான மின்மோட்டாருடன் கூடிய குளியல் நீா்த்தொட்டி அமைத்துத் தர மீண்டும் கிராமத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.