47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாறைக்குளம் அருள்மிகு வெள்ளியம்பலநாதர் கோயிலில் தை மாத அமாவாசை வழிபாடு 

திருச்சுழி வட்டம் பாறைக்குளம் கிராமத்திலுள்ள அருள்மிகு வெள்ளியம்பலநாதர் திருக்கோயிலில் வியாழக்கிழமை இரவு தை மாத அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

News image
வெள்ளியம்பலநாதர் கோயிலில் நடைபெற்ற தை மாத அமாவாசை சிறப்பு வழிபாட்டில் தீபாராதனையின்போது அருள்பாலித்த அருள்மிகு வெள்ளியம்பல நாதர்.
Updated On :11 பிப்ரவரி 2021, 2:49 pm

DIN

திருச்சுழி வட்டம் பாறைக்குளம் கிராமத்திலுள்ள அருள்மிகு வெள்ளியம்பலநாதர் திருக்கோயிலில் வியாழக்கிழமை இரவு தை மாத அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள பாறைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு வெள்ளியம்பல நாதர் திருக்கோவில். இக்கோயிலில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தைமாத சிறப்பு அமாவாசை வழிபாட்டில் அருள்மிகு வெள்ளியம்பலநாதருக்கு பால், விபூதி, குங்குமம், பன்னீர், தயிர், இளநீர், சந்தனம், கஸ்தூரி மஞ்சள் அபிஷேகமும் மேலும் தேன், பேரீச்சம்பழம், வாழைப்பழம் கலந்த கலவை என மொத்தம் 21 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், தீப, தூப ஆராதனைகளும் நடைபெற்றன. 
அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு முழு அலங்காரத்தில் அருள்மிகு வெள்ளியம்பலநாதர் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். திருச்சுழியில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்க்கான தர்ப்பண சமயச்சடங்குகள் செய்துமுடித்த பக்தர்களும் இக்கோயிலுக்கு வந்திருந்தனர். 
இதில் நூற்றுக்கணக்கானோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயிலின் பூசாரியும் சிவனடியாருமான ராஜபாண்டி செய்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.