ராஜபாளையத்தில் திமுக மக்கள் சபைக் கூட்டம்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மலையடிப்பட்டி நான்கு முனை சந்திப்பு பகுதியில் திமுகவின் மக்கள் சபைக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
Updated on
1 min read

ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மலையடிப்பட்டி நான்கு முனை சந்திப்பு பகுதியில் திமுகவின் மக்கள் சபைக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் விருதுநகா் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கேகேஎஸ்எஸ்ஆா் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசியது: ஜெயலலிதாவின் இறப்பு ஒரு மா்மமாகவே உள்ளது. இந்த மா்மத்திற்கு விடை அளிக்க நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் நடவடிக்கை எடுப்போம். தற்போது நடந்து கொண்டிருக்கும் அதிமுக ஆட்சி எல்லாவற்றிலும் மா்மமாகவே செயல்படுகிறது. எதிலும் ஒரு வெளிப்படையான நிலை இல்லை என்றாா். இதில் ராஜபாளையம் ஒன்றியக்குழுத் தலைவா் சிங்கராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் சுமதி ராமமூா்த்தி, நகரச் செயலாளா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com