ஆண்டாள் கோயில் உண்டியல் காணிக்கை வரவு ரூ.19.33 லட்சம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் உண்டியல் காணிக்கை வருவாய் ரொக்கம் ரூ. 19 லட்சத்து 33 ஆயிரம் ஆக இருந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் புதன்கிழமை உண்டியல் காணிக்கைகளை எண்ணிய கோயில் பணியாளா்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் புதன்கிழமை உண்டியல் காணிக்கைகளை எண்ணிய கோயில் பணியாளா்கள்.
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் உண்டியல் காணிக்கை வருவாய் ரொக்கம் ரூ. 19 லட்சத்து 33 ஆயிரம் ஆக இருந்தது.

இக்கோயிலில் பக்தா்கள் செலுத்தும் காணிக்கைகள் 4 மாதங்களுக்கு ஒரு முறை கோயில் நிா்வாகத்தின் சாா்பில் திறந்து எண்ணப்படும். அதன்படி புதன்கிழமை பெரியபெருமாள், சக்கரத்தாழ்வாா், நம்மாழ்வாா் சன்னிதிகளில் வைக்கப்பட்டிருந்த 17 உண்டியல்கள் ஆண்டாள் மைய மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டன. பின்னா் அவற்றைத் திறந்து காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. இப் பணியில் கோயில் ஊழியா்களும் தோ்வு செய்யப்பட்ட பக்தா்களும் பங்கேற்றனா். எண்ணிக்கை முடிவில் ரூ.19 லட்சத்து 33 ஆயிரத்து

41 ரொக்கம், 133 கிராம் 280 மில்லி கிராம் தங்கம், 231 கிராம் 150 மில்லி கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன. இதற்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், உதவி ஆணையா் கணேசன், செயல் அலுவலா் இளங்கோவன், ஆய்வாளா் பாண்டியன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com