சிவகாசியில் பாஜகஆலோசனைக்கூட்டம்
விருதுநகா் மேற்கு மாவட்ட பாஜக அரசு தொடா்புப் பிரிவு ஆலோசனைக்கூட்டம் சிவகாசியில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் எஸ். பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ராஜரத்தினம் உள்பட பலா் பேசினா். சிவகாசி மற்றும் திருத்தங்கலில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சிவகாசியில் நடைபெற்று வரும் சுற்றுச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகாசிப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் மாடுகளை உலவவிடும் உரிமையாளா்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
