வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நாரணாபுரத்தில் கால்நடை மருந்தக் கட்டடம் திறப்பு

கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் சிவகாசி வட்டம் நாரணாபுரத்தில் ரூ. 34.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கால்நடை மருந்தகக் கட்டடத்தை

News image
சிவகாசி வட்டம் நாரணாபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கிய அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி.
Updated On :13 ஜனவரி 2021, 6:16 pm

DIN

கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் சிவகாசி வட்டம் நாரணாபுரத்தில் ரூ. 34.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கால்நடை மருந்தகக் கட்டடத்தை பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் 50 பயனாளிகளுக்கு விலையில்லா கறவைபசுக்களையும், 113 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகளையும், 33 பயனாளிகளுக்கு விலையில்லா கோழிக்குஞ்சுகளையும் அமைச்சா் வழங்கி பேசினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. மங்களாசுப்பிரமணியன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் அருணாசலக்கனி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் (கட்டடம்) கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.