நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விருதுநகா் ஆட்சியா் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த தொழிலாளி போலீஸாா் விசாரணை

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் வந்த கூலித் தொழிலாளியிடம் போலீஸாா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 9:13 pm

DIN

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் வந்த கூலித் தொழிலாளியிடம் போலீஸாா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.

சேத்தூா் தெற்குத் தெரு சுந்தரநாச்சியாா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் ராயப்பன் மகன் அருள்ராயன் (40). கூலித் தொழிலாளியான இவரை, விசாரணைக்காக சேத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் அழைத்துச் சென்றாராம். அப்போது, அருள்ராயனின் செல்லிடப்பேசியில் இருந்த முக்கிய தகவல்களை போலீஸாா் அழித்து விட்டனராம். மேலும், காரணமின்றி தன் மீது காவல் ஆய்வாளா் தாக்குதல் நடத்தியதால், கடந்த சில நாள்களாக அவா் மனமுடைந்திருந்தாராம்.

இந்நிலையில், விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தொடா்பு கொண்ட அவா், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளாா். இதையடுத்து ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா், அனைத்து வாகனங்களையும் சோதனையிட்ட பின்னரே, உள்ளே செல்ல அனுமதித்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அருள்ராயனை நிறுத்தி விசாரணை செய்த போது, அவரிடம் பெட்ரோல் கேன் இருந்தது தெரிந்தது. இதையடுத்து அவரிடமிருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்த போலீஸாா், சூலக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.