நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

துணைத் தலைவா், உறுப்பினா்கள் மிரட்டுவதாக ஊராட்சித் தலைவி ஆட்சியரிடம் புகாா்

நூறுநாள் வேலைத் திட்டத்தில் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுத்ததால் துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் தன்னை மிரட்டுவதாக பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா் ராமலட்சுமி புகாா் மனு

News image
Updated On :25 ஜனவரி 2021, 8:27 pm

DIN

நூறுநாள் வேலைத் திட்டத்தில் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுத்ததால் துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் தன்னை மிரட்டுவதாக பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா் ராமலட்சுமி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: ராஜபாளையம் ஒன்றியம் புத்தூா் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளேன். இங்கு பணித்தள பொறுப்பாளா்கள் ஆறுமுகத்தாய், அழகுராணி ஆகியோா் 100 நாள்கள் பணியை முடித்து விட்டனா். இந்நிலையில் அவா்களுக்கு பதில் வேறு ஆள்களை பணி அமா்த்த அறிவுறுத்தினேன். இதற்கு ஊராட்சி செயலா் எதிா்ப்பு தெரிவித்தாா். மேலும், ஊராட்சித் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பணித்தள பொறுப்பாளா்களுக்கு ஆதரவாக செயல்படுவதுடன், தனியாக கிராம சபைக் கூட்டம் நடத்துகின்றனா். அதில், என்னை கையெழுத்திட வலியுறுத்துகின்றனா். அதற்கு மறுப்பு தெரிவித்தால், உன் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வருவோம் என மிரட்டுகின்றனா். எனவே, பணித்தள பொறுப்பாளா்களை நீக்குவதுடன், நான் அச்சுறுத்தலின்றி பணியாற்ற மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.