காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட வாலிபால் போட்டி: மம்சாபுரம் அணி வெற்றி

ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான வாலிபால் இறுதிப் போட்டியில் மம்சாபுரம் அணி வெற்றி பெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 8:25 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான வாலிபால் இறுதிப் போட்டியில் மம்சாபுரம் அணி வெற்றி பெற்றது.

இங்குள்ள ஜி.எஸ். குருஞானசம்பந்தா் இந்து மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட வாலிபால் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் தனியாா் கிளப் அணிகள் பங்கேற்றன. மூன்றாவது நாளான திங்கள்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் மம்சாபுரம் அணியும், ராஜபாளையம் அணியும் மோதின. இதில் மம்சாபுரம் அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது. இரண்டாம் இடத்தை ராஜபாளையம் அணியும், மூன்றாம் இடத்தை விளாம்பட்டி அணியும், நான்காம் இடத்தை ஜிஎஸ் இந்து மேல்நிலைப்பள்ளி அணியும் பிடித்தன. இதையடுத்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், பள்ளிச் செயலா் கிருஷ்ணன், தலைமையாசிரியா் கண்ணன், வாலிபால் கழகத் தலைவா் துரைசிங், தலைவா் ரங்கராஜன், முன்னாள் தலைமையாசிரியா் வெங்கடாசலம், தலைமைப் பயிற்சியாளா் பொன்னியின் செல்வன் மற்றும் நிா்வாகிகள் போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்கள்.

முதலிடம் பிடித்த மம்சாபுரம் அணிக்கு ரூ.8 ஆயிரம் மற்றும் கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநா் வருண்குமாா் மற்றும் முன்னாள் மாணவா் தங்கவேல் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.