47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அருப்புக்கோட்டையில் பேருந்தைவிட்டுக் கீழிறங்கிய இளைஞர் மயங்கி விழுந்து பலி

அருப்புக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழந்தார். 

News image
கோப்புப்படம்.
Updated On :31 ஜனவரி 2021, 12:59 pm

DIN

அருப்புக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழந்தார். 
விருதுநகர் அருகே சின்னமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மனோகரன்(44). இவர் அவரது கிராமத்திற்கு அருகிலுள்ள புதூர் பேரூராட்சியில் அலுவலராகப் பணிபுரிகிறார். இதனிடையே இவர் ஞாயிற்றுக்கிழமை சொந்த வேலையாக அருப்புக்கோட்டைக்குப் பேருந்தில் கிளம்பி வந்தாராம். 
பேருந்துநிலையம் வந்ததும், அங்கு பேருந்தைவிட்டுக் கீழிறங்கிய அவர், சில விநாடிகளில் திடீரென மயங்கிச் சுருண்டு விழுந்தாராம். இதைப்பார்த்த பொதுமக்கள், அவரை எழுப்பத் தண்ணீர் தெளித்தும் விழிக்கவில்லையாம். 
இதனால் 108 அவசர மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, அவர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாராம். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனராம். 
இதுதொடர்பாக வழக்கு பதிந்த அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் மனோகரனின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.