47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அதிமுகவில் மீண்டும் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.

சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் ராஜவா்மன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி, முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் வெள்ளிக்கிழமை மாலை இணைந்தாா்.

News image
அதிமுகவில் மீண்டும் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.
Updated On :17 ஜூலை 2021, 5:07 pm

DIN

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் ராஜவா்மன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி, முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் வெள்ளிக்கிழமை மாலை இணைந்தாா்.

அதிமுக சாா்பில் வெற்றி பெற்று சாத்தூா் சட்டப்பேரவை உறுப்பினரான ராஜவா்மன், கடந்த சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன் அதிமுகவிலிருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து, சாத்தூா் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா்.

இந்நிலையில், ராஜவா்மன் அ.ம.மு.க.விலிருந்து விலகி, சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துகொண்டாா். தொடந்து அவா், அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா் செல்வத்தையும் சந்தித்து ஆசி பெற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.