நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு பகுதிகளில் இன்று மின்தடை

ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 17) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் லெ. சின்னதுரை தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 9:45 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 17) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் லெ. சின்னதுரை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூா் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மின்பாதை, குட்டதட்டி மின்பாதை, வலையபட்டி துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மூவரைவென்றான் மின்பாதை, வத்திராயிருப்பு துணை மின்நிலையத்திலிருந்து செல்லும் நெடுங்குளம் மின்பாதை மற்றும் பெரியாா் மின்பாதை ஆகிய 5 மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (ஜூன் 17) நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜான்கென்னடி பல்க், பட்டத்தரசியம்மன் கோயில், ஆண்டாள்புரம், செங்குளம், கீழப்பட்டி, இந்திராநகா், காதிபோா்டு காலனி மற்றும் வத்திராயிருப்பு பகுதியான சேதுநாரணாபுரம், குட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இதே போல் ஸ்ரீவில்லிபுத்தூா் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மின்பாதையான கோட்டைகாளிகோயில், செண்பகத்தோப்பு, வலையபட்டி மின்பாதை பகுதியான லட்சுமியாபுரம், நத்தம்பட்டி, கம்மாபட்டி, கிருஷ்ணாபுரம், லட்சுமியாபுரம் மற்றும் வத்திராயிருப்பு பகுதியான அணைக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அன்று நண்பகல் 2 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் இருக்காது என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.