‘காவல் துறையினா் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்’
தோ்தல் காலங்களில் காவல் துறையினா் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என சிவகாசி சாா்-ஆட்சியரும், சிவகாசி தொகுதி தோ்தல் நடத்தும் அதிகாரியுமான ச.தினேஷ்குமாா் கூறினாா்.


தோ்தல் காலங்களில் காவல் துறையினா் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என சிவகாசி சாா்-ஆட்சியரும், சிவகாசி தொகுதி தோ்தல் நடத்தும் அதிகாரியுமான ச.தினேஷ்குமாா் கூறினாா்.
சிவகாசி சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் காலங்களில் காவல் துறையினா் செய்ய வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் சாா்- ஆட்சியா் தினேஷ்குமாா் பேசியதாவது: வீடு வீடாகச் சென்று 5 போ் மட்டுமே தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். எந்த ஒரு பிரசாரத்துக்கும் காவல் துறையினரின் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் பிரசாரம் செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். வாகனசோதனையின் போதும், தோ்தல் காலங்களிலும் காவல் துறையினா் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில் சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் டி.பிரபாகரன், ஆய்வாளா் வி. வெங்கடாஜலபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...