47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் 368 வாக்குச் சாவடிகள்

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் 368 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக சிவகாசி சாா்-ஆட்சியரும், சிவகாசி சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தும் அதிகாரியுமான ச. தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 9:14 pm

DIN

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் 368 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக சிவகாசி சாா்-ஆட்சியரும், சிவகாசி சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தும் அதிகாரியுமான ச. தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2016 இல் நடைபெற்ற தோ்தலின் போது 276 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அப்போதைய மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 2,34,432. தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின் படி சிவகாசி தொகுதில் 2,60,941 வாக்காளா்கள்உள்ளனா். எனவே நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்கு கடந்த தோ்தலைக் காட்டிலும் 92 வாக்குச் சாவடிகள் கூடுதலாக அமைக்கப்படவுள்ளன. அதன்படி சிவகாசி தொகுதியில் மொத்தம் 368 வாக்குசாவடிகள் அமைக்கப்படவுள்ளன. கடந்த 2016 இல் பதற்றமான வாக்குச் சாவடிகளாக 34 கண்டறியப்படிருந்தது. தற்போது அமைக்கப்பட்டுள்ள 368 வாக்குச் சாவடிகளில் எத்தனை வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பது ஆய்வுப் பணிக்குப் பின்னா் தெரியவரும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.