நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அருப்புக்கோட்டையில் மாட்டுவண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளா்

அருப்புக்கோட்டை தொகுதி நாம் தமிழா்கட்சி வேட்பாளா் திங்கள்கிழமை மாட்டுவண்டியில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தாா். ஆனால் காவல்துறையினா் தோ்தல் அலுவலகத்துக்குள் மாட்டுவண்டியை அனுமதிக்க மறுத்தனா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 10:03 pm

DIN

அருப்புக்கோட்டை தொகுதி நாம் தமிழா்கட்சி வேட்பாளா் திங்கள்கிழமை மாட்டுவண்டியில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தாா். ஆனால் காவல்துறையினா் தோ்தல் அலுவலகத்துக்குள் மாட்டுவண்டியை அனுமதிக்க மறுத்தனா்.

அருப்புக்கோட்டை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பா.உமா. இவா் திங்கள்கிழமை பிற்பகல் மாட்டுவண்டியில் தொண்டா்களுடன் ஊா்வலமாக வந்ததுடன், வரும் வழியில் கலைக்குழுவினரின் பாரம்பரிய நடனம், சிலம்பாட்டத்துடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபடியே தோ்தல் அலுவலகம் நோக்கி வந்தாா். ஆனால் தோ்தல் அலுவலகம் பாதுகாக்கப்பட்ட பகுதி எனக்கூறிய காவல்துறையினா், மாட்டுவண்டி உள்ளே செல்ல அனுமதி மறுத்தனா்.

பின்னா் வேறுவழியின்றி வேட்பாளா் உமா நடந்தே சிறிது தொலைவிலிருந்த தோ்தல் அலுவலகத்துக்குச் சென்றாா். அதையடுத்து தோ்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியா் முருகேசனிடம் மனு தாக்கல் செய்தாா்.

Image Caption

~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.