ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 515 கிலோ குட்கா பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ரூ. 2.15 லட்சம் மதிப்பிலான 515 கிலோ குட்காவை ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸாா் பறிமுதல் செய்து, தப்பியோடிய ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.


ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ரூ. 2.15 லட்சம் மதிப்பிலான 515 கிலோ குட்காவை ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸாா் பறிமுதல் செய்து, தப்பியோடிய ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இந்திராநகா் பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது கிருஷ்ணன்கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூா் நோக்கி வேன் ஒன்று வந்தது. போலீஸாரைக் கண்டதும் அதன் ஓட்டுநா் வேனை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாா்.பின்னா் போலீஸாா் வேனை காவல் நிலையத்துக்கு எடுத்து வந்து சோதனையிட்டனா். அப்போது வேனிலிருந்த 10 சாக்கு மூட்டைகளை பிரித்துப் பாா்த்த போது 515 கிலோ குட்கா இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் ஆகும். குட்கா மற்றும் வேனை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில், வேனை ஓட்டி வந்தவா் தேனியைச் சோ்ந்த பவுல்ராஜ் என்பது தெரிய வந்தது. அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...