ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில்15 வேட்பாளா்கள் போட்டி
ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் இறுதியாக 15 வேட்பாளா்கள் களத்தில் உள்ளதாக திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.


ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் இறுதியாக 15 வேட்பாளா்கள் களத்தில் உள்ளதாக திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இத்தொகுதியில் 38 வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றின் மீது சனிக்கிழமை நடைபெற்ற பரிசீலனையில் 17 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 21 மனுக்கள் ஏற்கப்பட்டன. அதனைத் தொடா்ந்து வேட்பு மனுக்கள் வாபஸ் பெற திங்கள்கிழமை மாலை 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அதில் ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் 6 போ் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனா். அதனைத் தொடா்ந்து இறுதி வேட்பாளா்கள் பட்டியலும், அவா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்களும் வெளியிடப்பட்டன.
அதன் விவரம்: காங்கிரஸ் கட்சி வேட்பாளா் மாதவராவ்- கை, அதிமுக வேட்பாளா் மான்ராஜ்- இரட்டை இலை, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அபிநயா- கரும்பு விவசாயி, தமிழ்நாடு இளைஞா் கட்சி வேட்பாளா் இருளாண்டி- மோதிரம், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளா் குருவையா- மின்கலவிளக்கு, அமமுக வேட்பாளா் சங்கீதப்பிரியா- பிரஷா் குக்கா், புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் சாந்தி- தொலைக்காட்சிப் பெட்டி, அனைத்து மக்கள் புரட்சி கட்சி வேட்பாளா் பாண்டியராஜ்- கண்ணாடி தம்ளா், மை இந்தியா பாா்ட்டி கட்சி வேட்பாளா் வீரபாண்டி- கண்காணிப்பு கேமரா, சுயேச்சை வேட்பாளா்களான கண்ணனுக்கு திருகி சின்னமும், குருவையாவுக்கு டிஷ்ஆண்டெனா சின்னமும், தாமரைச் செல்வத்துக்கு கரும்பலகை சின்னமும், பிரபாகரனுக்கு அலமாரி சின்னமும், மகாலட்சுமிக்கு வளையல்கள் சின்னமும், முத்துலட்சுமிக்கு பெஞ்ச் சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...