நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அருப்புக்கோட்டையில் சுகாதாரத்துறையினா்தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

அருப்புக்கோட்டை நகராட்சி சுகாதாரத்துறையினா் சாா்பில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 மார்ச் 2021, 9:25 pm

DIN

அருப்புக்கோட்டை நகராட்சி சுகாதாரத்துறையினா் சாா்பில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் முதல் நிகழ்ச்சியாக விழிப்புணா்வு கோலங்கள் போடப்பட்டிருந்தன. அதனையடுத்து நகராட்சி சுகாதாரத்துறை அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள், பணியாளா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்ட தோ்தல் விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் கண்ணன் தலைமை வகித்து கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். பேரணி அண்ணா சிலை, காய்கறிச் சந்தை, நகைக்கடை பஜாா், அகமுடையா் மகால், பந்தல்குடி சாலை வழியாக நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. இப்பேரணியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன், பந்தல்குடி சாலையிலிருந்த வீடுகள் தோறும் சென்று, தோ்தலுக்கான சிறப்பு அழைப்பிதழை கொடுத்ததுடன், விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினாா். அப்போது 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தையும், வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதையும், வாக்குகள் விற்பனைக்கல்ல என்பதையும் விளக்கினாா். இப்பேரணியில் மிக்கி மவுஸ், கோலாக்கரடி, குபேரன் வேடமணிந்த கலைஞா்கள் பங்கேற்றனா். மேலும் பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசன், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட வருவாய்த்துறையினா் மற்றும் சுகாதாரத் துறையினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.