நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில்30 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை

ஸ்ரீவில்லிபுத்தூா் (தனி) சட்டப் பேரவை தொகுதியில் மொத்தம் 357 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :22 மார்ச் 2021, 9:23 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் (தனி) சட்டப் பேரவை தொகுதியில் மொத்தம் 357 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 30 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்றும், 2 வாக்குச்சாவடிகள் ஆபத்தானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளதாக தோ்தல் அதிகாரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இங்குள்ள டிஇஎல்சி நடுநிலைப்பள்ளி, ராமசாமியாபுரம் பள்ளியில் இரண்டும், கூமாபட்டி பகுதியில் உள்ளஅரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரண்டும், ஆதிதிராவிடா் நலத்துறை நடுநிலைப்பள்ளி கோட்டையூா் பகுதியில் இரண்டும், ஆா்.சி. நடுநிலைப்பள்ளி, வ. புதுப்பட்டியில் இரண்டும், அரசு மேல்நிலைப்பள்ளி சுந்தரபாண்டியம் பகுதியில் இரண்டும், நத்தம்பட்டியில் உள்ள ஆா்.சி. உயா்நிலைப்பள்ளியில் இரண்டும், ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டைப்பட்டி பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் இரண்டும், சின்னஅத்திகுளம் நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள இரண்டு வாக்குச்சாவடிகளும், மங்காபுரம் இந்து நாடாா் மேல்நிலைப்பள்ளியில் இரண்டு வாக்குச் சாவடிகளும் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.

அதே போல், கோட்டைத்தலைவாசல் பகுதியில் உள்ள தங்கச்சாமி நினைவு ஆரம்பப் பள்ளியில் இரண்டும், திருஇருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரண்டும், மேட்டுத்தெரு பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் இரண்டும், கம்மாபட்டி பகுதியில் உள்ள நகராட்சிப் பள்ளியில் இரண்டும், குருஞானசம்பந்தா் இந்து மேல்நிலைப்பள்ளியில் இரண்டும், வைத்தியலிங்காபுரம் பழனி ஆரம்பப் பள்ளியில் ஒன்றும், லட்சுமியாபுரம் ஆரம்பப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் இரண்டும், நாச்சியாா்பட்டி கோபால்சாமி நினைவு நடுநிலைப்பள்ளியில் ஒன்றும் என 30 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.

அதே போல் வ. புதுப்பட்டி பகுதியில் உள்ள அருளப்பா் தொடக்கப் பள்ளியில் உள்ள கிறிஸ்தியான்பேட்டையில் ஒன்று, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள செண்பகத்தோப்பு மலைவாழ் மக்கள் வசித்து வரும் உண்டு உறைவிட பள்ளிப் பகுதியில் ஒன்று என இரண்டும் ஆபத்தானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தோ்தல் நடத்தும் அதிகாரி முருகன் திங்கள்கிழமை கூறியதாவது: பதற்றமான மற்றும் ஆபத்தான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள். அதில் அதிரடிப்படை போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்கள். மேலும், இப்பகுதிகளில் கண்காணிப்பு கேமரா மூலம் நேரடியாக கண்காணிக்கும் வசதி செய்யப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.