47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாறைக்குளம் ஸ்ரீவெள்ளியம்பலநாதர் கோயிலில் சிறப்பு பிரதோச வழிபாடு

திருச்சுழி அருகே பாறைக்குளம் கிராமத்திலுள்ள அருள்மிகு வெள்ளியம்பலநாதர் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை பங்குனி மாத சிறப்புப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :26 மார்ச் 2021, 3:47 pm

DIN

திருச்சுழி அருகே பாறைக்குளம் கிராமத்திலுள்ள அருள்மிகு வெள்ளியம்பலநாதர் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை பங்குனி மாத சிறப்புப் பிரதோச வழிபாடு நடைபெற்றது.
 விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டத்தில் உள்ள அஷ்டலிங்கக் கோயில்களில் பாறைக்குளம் கிராமத்திலுள்ள ஸ்ரீவெள்ளியம்பலநாதர் கோயிலானது மேற்குநோக்கி அமைந்துள்ள பழமையான குடைவரைக் கோயிலாகும். 
ஆண்டிற்கு ஒருமுறை சதுரகிரி மலைவாழ் சிவனடியார்கள் மொத்தமாக இங்கு வந்து சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தி வழிபடுவது வழக்கம். இதனால் இக்கோவில் இவ்வட்டாரத்தில் பிரபலமான ஒன்றாகும். 
இதனிடையே, இக்கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பங்குனி மாத சிறப்புப் பிரதோச வழிபாட்டில் முதலில் அருள்மிகு நந்தீஸ்வரப் பெருமானுக்கும் அதையடுத்து அருள்மிகு வெள்ளியம்பலநாதருக்கும் தேன், வாழைப்பழம், பேரீச்சம் பழம் ஆகியன கலந்த கலவையாலும், விபூதி, பால், தேன், குங்குமம், கஸ்தூரி மஞ்சள் தூள், கிழங்கு மஞ்சள்தூள் சந்தனம், பன்னீர், வில்வ இலை உள்ளிட்ட 21 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், தீப, தூப ஆராதனைகளும் நடைபெற்றன. 
அதைத்தொடர்ந்து முழு அலங்காரத்தில் அருள்மிகு நமச்சிவாயரும், அருள்மிகு நந்தீஸ்வரரும் பக்தர்களுக்குக் காட்சி தந்து அருள் பாலித்தனர். வழிபாட்டின்போது ஓம்நமச்சிவாய எனும் கோஷமிட்டபடியும், மகாமிருத்யுஞ்சய மந்திரம் சொல்லியும் பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அபிஷேக பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. 
இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயிலின் பூசாரியும் சிவனடியாருமான ராஜபாண்டி செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் 500க்கு மேற்பட்ட திரளான பக்தர்கள் நேரில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.