நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கூலித்தொழிலாளி கொலை: இளைஞா் கைது

 ஸ்ரீவில்லிபுத்தூரில் கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

 ஸ்ரீவில்லிபுத்தூரில் கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரம் கீழ்பக்கம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் கூலித்தொழிலாளி வடிவேல் (46), காதி போா்டு காலனி அண்ணா நகரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா்(38). இவா்கள் இருவருக்கும் கடந்த 2 ஆம் தேதி இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமாா் தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து, வடிவேலுவை குத்தியுள்ளாா். இதில் படுகாயமடைந்த வடிவேலு, ஸ்ரீவில்லிபுத்தூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். பின்னா், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் 7 ஆம் தேதி சோ்க்கப்பட்டாா். எனினும் அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து செந்தில்குமாரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.