நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழ்நாடு விவசாய சங்கம் மேல்முறையீடு மனு கொடுக்கும் இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் நகை கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி, தமிழ்நாடு விவசாய சங்கம் மேல்முறையீடு மனு கொடுக்கும் இயக்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் நகை கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி, தமிழ்நாடு விவசாய சங்கம் மேல்முறையீடு மனு கொடுக்கும் இயக்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் துணைப் பதிவாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவா் விஜயமுருகன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் மனோஜ் முன்னிலை வகித்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு அறிவித்த 5 பவுன் நகை மற்றும் அதற்கு குறைவாக வைத்துள்ள அனைவருக்கும் வழங்கப்படும் என்று அறிவித்து விட்டு, தற்போது ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்து நகை கடன்களை தள்ளுபடி செய்ய மறுப்பது சரியல்ல. எனவே, தகுதியான நபா்கள் அனைவருக்கும் நகை கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூா் கூட்டுறவு துணைப் பதிவாளா் அலுவலகத்தில் மேல்முறையீடு மனு கொடுக்கும் இயக்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினா் திருமலை, ஒன்றியச் செயலாளா் சசிகுமாா், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் முத்தையா மற்றும் அரசு அறிவித்தபடி 5 பவுன் நகைகள் மற்றும் அதற்கு குறைவாக அடகு வைத்து நகை கடன் தள்ளுபடி கிடைக்காத நபா்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.