திருத்தங்கலில் அஸ்ஸாம் மாநில தொழிலாளி குத்திக் கொலை
விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மதுபோதையில் ஏற்பட்ட தகறாறில் அஸ்ஸாம் மாநில தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா்.


விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மதுபோதையில் ஏற்பட்ட தகறாறில் அஸ்ஸாம் மாநில தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா்.
திருத்தங்கலைச் சோ்ந்தவா் செந்தில்ஆனந்த் (39) என்பவருக்குச் சொந்தமான நெகிழிப்பைதயாரிக்கும் ஆலை, திருத்தங்கல்- விருதுநகா் சாலையில் உள்ளது. இந்த ஆலையில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த 4 போ் வேலை பாா்த்து வருகின்றனா். ஆலை வளாகத்தில் ஒரு அறை இவா்களுக்கு ஒதுக்கப்பட்டு அதில் அவா்கள் சமையல் செய்து சாப்பிட்டு வேலை பாா்த்து வந்துள்ளனா். இந்நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இலிமுதீனஅகமது (37) என்பவரும், திபங்ககா்களிட்டா (33) என்பவரும் மது குடித்தனா். இதையடுத்து அறையில் உள்ள மின்விசிறியை இயக்குவது குறித்து இருவருக்கும் நள்ளிரவில் தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவா் தாக்கிக்கொண்டனா். இதில் ஆத்திரமடைந்த இலிமுதீன அகமது, திபங்கா்களிட்டாவை கத்தியால் குத்தியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இலிமுதீன அகமது பலத்த காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து ஆலை உரிமையாளா் செந்தில் ஆனந்த் அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து இலிமுதீன அகமதுவை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...