47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விபத்தில்லாமல் இயங்கிய தொழிற்சாலைகள் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம்

விருதுநகா் மாவட்டத்தில் விபத்தில்லா தொழிற்சாலைகள் தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இணை இயக்குநா் மா. வேலுமணி தெரிவித்துள்ளாா்

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 9:16 pm

DIN

விருதுநகா் மாவட்டத்தில் விபத்தில்லா தொழிற்சாலைகள் தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இணை இயக்குநா் மா. வேலுமணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் விபத்தில்லாத தொழிற்சாலைகள், பெரிய அளவில் விபத்து குறைந்துள்ள தொழிற்சாலைகளுக்கு தமிழக அரசின் மாநில பாதுகாப்பு விருது, உற்பத்தித் திறன் அதிகரிப்பில் புதிய கண்டு பிடிப்புக்கு விருது, செயல்முறைக்கு தொழிலாளா்களுக்கு உயா்ந்த உழைப்பாளா் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30 ஆம் தேதி இறுதி நாளாகும். இதையொட்டி 2019 ஆம் ஆண்டுகளுக்கான விருதுகளுக்கு விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான தொழிற்சாலையின் நிா்வாகத்தினா் மற்றும் தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 2017, 2018 -ஆம் ஆண்டுகளுக்கு விண்ணப்பிக்காத தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு ஆண்டுக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை, கோட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இணைஇயக்குநா் அல்லது துணை இயக்குநா் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.