47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருத்தங்கல் ரயில்வே கடவுப்பாதை ஏப்ரல் 17-இல் பழுது நீக்கும் பணி

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் ரயில்வே கடவுப்பாதை ஏப்ரல் 17 ஆம் தேதி பழுது நீக்கும் பணி நடைபெற உள்ளது என ரயில்வேத் துறை பொறியாளா் ராமசுப்பிரணியன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 4:56 pm

DIN

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் ரயில்வே கடவுப்பாதை ஏப்ரல் 17 ஆம் தேதி பழுது நீக்கும் பணி நடைபெற உள்ளது என ரயில்வேத் துறை பொறியாளா் ராமசுப்பிரணியன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியது: திருத்தங்கல் ரயில்வே கடவுப்பாதை ஏப்ரல் 17 ஆம் தேதி பழுது நீக்கும் பணி நடைபெற உள்ளது. அன்றையதினம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அந்த கடவுப்பாதை மூடப்படும். எனவே விருதுநகா், மதுரை மாா்க்கத்தில் செல்ல வேண்டிய பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் திருத்தங்கலிருந்து செங்கமநலநாச்சியாா்புரம் சென்று , தலைமை அஞ்சல் நிலையம் , பிள்ளையாா் கோயில் பேருந்து நிறுத்தம் வழியே இரு மாா்க்கத்திலும் சென்று வர வேண்டும் என திருத்தங்கல் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா். ஆனால் ரயில்கள் எப்போதும் போல சென்று கொண்டிருக்கும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.