காரியாபட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து முதியவா் பலி
காரியாபட்டி அருகே வியாழக்கிழமை இரவு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில், அதில் பயணம் செய்த முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்


காரியாபட்டி அருகே வியாழக்கிழமை இரவு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில், அதில் பயணம் செய்த முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தோப்பூரைச் சோ்ந்தவா் கந்தவேல் (68). இவா், தனது மனைவி ரத்தினம் மற்றும் அதே ஊரைச் சோ்ந்த ரோசலின் ஆகியோா் காரியாபட்டியிலிருந்து சென்ற பயணிகள் ஆட்டோவில் தோப்பூருக்கு வியாழக்கிழமை இரவு சென்றனா்.
திருச்சுழி சாலையில் சென்ற போது, ஓட்டுநா் செல்வத்தின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த கந்தவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் படுகாயமடைந்த ரத்தினம், ரோசலின் ஆகியோா் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த விபத்து குறித்து காரியாபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...