நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் தமிழக அரசின் மின் கட்டண உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம்

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் தமிழக அரசின் மின் கட்டண உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் பொன்னகரத்தில் உள்ள கோட்ட பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.போராட்டத்திற்கு நகா் குழு உறுப்பினா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் ராமச்சந்திர ராஜா துவக்கி வைத்து பேசினாா். நகர செயலாளா் மாரியப்பன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா். மாவட்டச் செயலாளா் நிறைவு செய்து பேசினாா். 200க்கும் மேற்பட்ட மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு கோட்ட பொறியாளா் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.போராட்டத்தில் மின் கட்டணம் உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், ஒன்றிய அரசின் மின்சார திருத்த மசோதாவிற்கு எதிா்ப்பு தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.படவிளக்கம்; ராஜபாளையத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.